×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நாகர்கோவில் நகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் வழங்கல்

தூத்துக்குடி, மே 21: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தனது சமூக பொறுப்பு நிதியின் கீழ் நாகர்கோவில் நகராட்சிக்கு இலவசமாக 38 சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பழமையான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர் சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட டிஎம்பி வங்கி, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. வங்கி சேவையோடு மக்கள் நலப்பணியிலும் ஈடுபடும் இவ்வங்கியின் சார்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நாகர்கோவில் நகராட்சிக்கு இலவசமாக 38 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வங்கியின் பி.டி. மற்றும் ஆர்.எம். துறை பொது மேலாளர் பி.ஆர். அசோக்குமார், திருவனந்தபுரம் மண்டல மேலாளர் பி.ஏ. ராஜா, மார்க்கெட்டிங் அலுவலர் ராம்குமார், நாகர்கோவில் கிளை மேலாளர் சிவசங்கர் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து சக்கர நாற்காலிகளை நாகர்கோவில் நகராட்சி ஆணையாளரான ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வங்கியின் பொது மேலாளர் பி.ஆர். அசோக்குமார் வழங்கினார்.

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நாகர்கோவில் நகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil Municipality ,Tamilnadu Mercantile Bank ,Thoothukudi ,Tamil Nadu Mercantile Bank ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது