×

கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபரை வெட்டிய 3பேர் கைது

அம்பை, மே 21: கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம் வேத கோயில் தெருவைச்சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்து ஆனந்த் (19). இவரது சகோதரர் சதீஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (39) என்பவர் அத்தை மகளை திருமணம் செய்துள்ளார். இதில் ஜெயக்குமாருக்கு பிடிக்கவில்லை என்பதால் முத்து ஆனந்த் குடும்பத்துடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 19ம் தேதி முத்து ஆனந்த் வீட்டிற்கு அருகே உள்ள சர்ச் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஜெயக்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் ஜெபமணி (26), கனகராஜ் (24) ஆகிய மூவரும் சேர்ந்து அவதூறாக பேசி முத்துஆனந்தை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த முத்துஆனந்தை அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவர் மணிமுத்தாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கலா வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார், ஜேக்கப் ஜெபமணி, கனகராஜ் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.

The post கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபரை வெட்டிய 3பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallidaikurichi ,Ambai ,Thangapandi ,Muthu Anand ,South Papankulam Veda Koil Street ,Satish ,Jayakumar ,
× RELATED அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு...