×

புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விராலிமலை:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் நீலியம்மன் என்ற பெயரில் பட்டாசு தயாரிப்புடன் சில்லரை பட்டாசு விற்பனை கடையை வேல்முருகன், அவரது சகோதரர் கார்த்தி ஆகியோர் நடத்துகின்றனர். கடையின் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் குடோனில் வெடிப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குடோனை சீரமைப்பதற்காக வெல்டிங் வைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது.

விராலிமலையை சேர்ந்த சிவா, முருகேசன் என்ற 2 தொழிலாளிகள் வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட தீப்பொறி திடீரென குடோனில் விழுந்தது. இதில் உள்ளே இருந்த வெடிகள் மற்றும் வெடி மருந்துகள் வெடித்து சிதறியது. குடோனுக்குள் இருந்த கார்த்தி (27) உடல் கருகி உயிரிழந்தார். சிவா மற்றும் முருகேசனை தீக்காயத்துடன் மீட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பட்டாசு கிடங்கில் வெடிவிபத்தில் கார்த்தி என்பவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Chief Minister ,M.K.Stal ,Viralimalai ,Velmurugan ,Karthi ,Neeliamman ,Attipallam ,CM ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...