×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஈரோடு, மே 21: பவானி அடுத்துள்ள வேலாமரத்தூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா, பர்கானாஸ் பகுதியை சேர்ந்த பாணிகாண்குசர்தார் மகன் சவுரப்சர்தார் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Appakodal police ,Velamarathur ,Bhawani ,Panikankusardar ,West Bengal, Kolkata ,Parganas ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...