×

வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இம்ரான், சில வழக்குகளில் இருந்து தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2022 மே 9ம் தேதி இம்ரான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பேரணியில் அவரது கட்சியினர் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கோசார், கராச்சி காவல் நிலையங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக பதிவான வழக்குகளில் இருந்து இம்ரான் உள்ளிட்ட பிடிஐ கட்சியினரை விடுவித்து இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan ,PTI ,Imran ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத திருமண வழக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை