×

வெண்டைக்காய் கடலை மசாலா

தேவையானவை

கொண்டைக்கடலை – 100 கிராம்
வெண்டைக்காய் – 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
சோலே மசாலா தூள் – ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
இஞ்சி, பூண்டு – விழுது 10 கிராம்
தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

சீரகம்,
நறுக்கிய பச்சை மிளகாய்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெண்டைக்காயை விரல் நீளத்திற்கு வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியதும், தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். இஞ்சி பூண்டு விழுது போடவும் கிளறி விட்டதும் மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இதில் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வெந்ததும், சிறிது தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான வெண்டைக்காய் கடலை மசாலா தயார்.

The post வெண்டைக்காய் கடலை மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிக்கன் சமோசா