×

டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப வந்த லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் புவனகிரியில் இருந்து நல்கொண்டா செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு டீசல் நிரப்ப ஒரு லாரி நேற்று வந்தது. பெட்ரோல் பங்க்கின் உள்ளே வந்தபோது லாரியின் டீசல் டேங்க் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும் பெட்ேரால் பங்க்கில் இருந்தவர்கள் உடனே தீத்தடுப்பு கருவியை கொண்டு தீயை அணைத்தனர். போராடி அணைத்ததில் தீ முற்றிலும் அணைந்தது.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், டீசல் டேங்க் வெடித்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் லாரியின் டீசல் டேங்கர் வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

The post டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana Tirumala ,Bhubanagiri ,Nalkonda ,Telangana ,
× RELATED புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி