×
Saravana Stores

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மீது பலாத்கார வழக்கு: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி


கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் உலுபெரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட வீரர் மீது உலுபெரியா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மேற்குவங்க மாநில அமைச்சரும், திரிணாமுல் மூத்த தலைவருமான ஷஷி பஞ்சா கூறுகையில், ‘சந்திப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பெண்ணை, பாதுகாப்பு வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணிக்கு அமர்த்தப்பட்ட மத்தியப் படை வீரர்கள், பெண்களை வேட்டையாடுபவர்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் மக்களை பாதுகாக்கவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில், மேற்கண்ட புகார் தொடர்பாக பிஎஸ்எப் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் பணியில் இருந்து நீக்கப்பட்டார். துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மீது பலாத்கார வழக்கு: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Central Auxiliary Army ,Western State ,
× RELATED கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின்...