×

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்

திருத்துறைப்பூண்டி, மே 20: திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் நவீன முறையில் மேம்படுத்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை மான்ய கோரிக்கை எண். 34ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஏற்கனவே இந்த பஸ் நிலையம் ஒரே நேரத்தில் 11 பஸ்கள் நிறுத்த கூடிய அளவில் சி” கிரேடாக இருந்ததை தற்போது 25 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய ”பி” கிரேடாக மேம்படுத்த உரிய விதிமுறையின்படி மாவட்ட கலெக்டர் சாரு பரிந்துரை செய்தார்.அந்த பரிந்துரையின் அடிப்படையில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டம் 2023-2024ன் கீழ் 9000 சதுர மீட்டர் பரப்பளவில் 51 கடைகள், 2 உணவகம் மற்றும் தேவையான வசதிகளுடன் ரூ.7 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுடைய நலன் கருதி திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட திருவாரூர் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் இன் எதிர்புறம் ஒரு தற்காலிக பஸ் நிலையமும், திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையை ஒட்டி ஒரு தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது மேற்படி தற்காலிக பஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிலையத்தில் வேதாரண்யம் மார்க்கமாக வரக்கூடிய பஸ்களும், மன்னார்குடி வழியாக வரக்கூடிய பஸ்களும் இயக்கப்படும். மேலும் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிலையத்தில் திருவாரூர் மார்க்கமாக வரக்கூடிய பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் பட்டுக்கோட்டையில் இருந்து வரக்கூடிய பஸ்கள் 12ம் தேதி (ஞாயிறு கிழமை) முதல் செயல்ப்பட்டு வருகிறது. மேலும் பழைய பஸ் நிலையம் இடித்து அப்புறப்படுத்தும் பணி மழையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Thiruthaurapoondi ,MLA ,Marimuthu ,Thiruthuraapoondi ,
× RELATED திருவாரூர் கோடை மழைக்கு என்ன சாகுபடி...