×

திருப்பாச்சேத்தி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

திருப்புவனம், மே 20: திருப்பாச்சேத்தி அருகே கல்லூரணியில் மெய்கண்ட தாண்டவ மூர்த்தி விநாயகர், வழிவிடு வல்லப விநாயகர், மந்தையம்மன், சப்த கன்னிமார், ஜெயங்கொண்ட விநாயகர்,முனியாண்டி சுவாமி உட்பட ஆறு திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. முதல் நாள் யாக சாலை பூஜையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று துவக்கி வைத்தார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராமலிங்கம், பொன்மலை, சாமிராஜா, கண்ணன், பாஸ்கரன் ஆகியோர் கிராமத்தின் சார்பாக அமைச்சரை வரவேற்றனர்.

காலையில் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். கல்லூரணியை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பரமக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாண்டிமகாராஜன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரணி கிராம மக்கள் மற்றும் வ.உ.சி.இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

The post திருப்பாச்சேத்தி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar temple ,Tirupachetty ,Tiruppuvanam ,Meikanda ,Thandava ,Murthy Vinayagar ,Lavidhu Vallabha Vinayagar ,Manthaiyamman ,Saptha Kannimar ,Jayangkonda Vinayagar ,Muniyandi Swamy ,Kallurani ,Tiruppachetty ,Yaga Road… ,
× RELATED புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில்...