×

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி

 

திட்டக்குடி, மே 20: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கத்தாழைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மனைவி சிவமாலை(69). இவர் நேற்று கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூருக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் ஊர் செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். அதே கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் என்பவரும் அந்த ஆட்டோவில் பயணம் செய்தார். ஆட்டோவை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜபாண்டியன்(29) என்பவர் ஓட்டி வந்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வெள்ளாற்று மேம்பாலம் அருகே ஆட்டோ திடீர் என சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சிவமாலை மற்றும் சின்னம்மாள் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவமாலை உயிரிழந்தார். இது குறித்து சிவமாலை மகன் ரஜினி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Sivamalai ,Mottaiyan ,Kathathalamedu ,Gunnam taluk, Perambalur district ,Tosludur ,Ramanatha ,Cuddalore district ,
× RELATED அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை