×

பெரியபாளையம் அருகே பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகம்: திறக்க பொதுமக்கள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை,மே 20: அக்கரப்பாக்கம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். இதனால் கடந்த 2010-2011ம் ஆண்டு இங்குள்ள ரேஷன் கடை அருகில் ரூ.3.2 லட்சம் செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

இதில் அப்பகுதியை சேர்ந்த படித்தவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் எழுதிய நூல்கள் ஆகியவற்றை படித்து வந்தனர். இந்நிலையில் பல மாதங்களாகவே இந்த நூலகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் புத்தகம் வீணாகி கரையானுக்கு இரையாகிறது. மேலும் நூலகம் மூடியே கிடப்பதால் அங்கு சிலர் படுத்து ஓய்வு எடுக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே நூலகர் ஒருவரை நியமித்து மூடிக்கிடக்கும் நூலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகம்: திறக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Akkarappakkam ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏரிக்கால்வாய்...