×

நாகப்பட்டினத்தில் காலை உணவு திட்டம் கடந்தாண்டில் 16,223 மாணவ, மாணவிகள் பயன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கோடைமழை

நாகப்பட்டினம், மே 20: நாகப்பட்டினம் மாவட்டத்தின் கிராம பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் கோடைவெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்திலும் கடுமையான வெயில் கொளுத்தியது. இம்மாவட்டடத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களாக வெயில் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் வருணபகவான் கருணையால் கடந்த 4 தினங்களாக கோடைமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. பரவலாக பெய்து வரும் கோடைமழையால் வெப்பம் தணிந்தது. பொதுமக்களும் தப்பித்தனர்.

கோடைமழை அதி கனமழையாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று மதியம் கனமழை பெய்தது. மாவட்டத்தில் திருப்பூண்டி, பூவைத்தேடி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், மணல்மேடு, சடையன்காடு, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிராம பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகிறது. குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளில் வசிப்போர் வெப்ப தாக்குதலிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த கோடைமழையானது விவசாயத்திற்கும் ஏற்றதாக இருப்பதால் மழைநீரை வைத்து கோடை உழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விட்டு விட்டுமழை பெய்தது. இந்த நிலையில் 2 நாட்களாக மழை ஓய்ந்து இருந்த நிலையில் நேற்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, தோப்புதுறை, தேத்தாகுடி, பூப்பெட்டி, நெய்விளக்கு ஆயக்காரன்புலம் கரியாபட்டினம் மருதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த கோடை மழையால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினத்தில் காலை உணவு திட்டம் கடந்தாண்டில் 16,223 மாணவ, மாணவிகள் பயன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கோடைமழை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam district ,Agni Nakshatra ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை