×

இடியுடன் கனமழை

சூளகிரி, மே 20: சூளகிரி வட்டாரத்தில், நேற்று மாலை 3.30 மணி முதல் ஒரு மணிநேரம், சூளகிரி சுற்றுவட்டாரமான உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, குண்டு குறுக்கி, பேரிகை, கும்பளம், காளிங்காவரம், மேலுமலை, சூளகிரி, சின்னார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கனமழை கொட்டியது. இதில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் முட்டைகோஸ், தக்காளி மிளகாய், பூதினா, கொத்தமல்லி தோட்டங்கள் சேதமானது. அதே போல், சூளகிரி தினசரி மார்க்கெட்டில் மழைநீர் புகுந்தது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post இடியுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,Choolagiri district ,Uthanapally ,Kamanthotti ,Koneripalli ,Kundu Kurukki ,Parikai ,Kumbalam ,Kalingavaram ,Melumalai ,Chinnar ,Choolagiri.… ,Dinakaran ,
× RELATED பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு