×

ஆத்தூர் அருகே வீடு புகுந்து செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

ஆறுமுகநேரி,மே.20: ஆத்தூர் அருகே வீடு புகுந்து செல்போன்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி ரவுண்டானா பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மகன் முத்துராஜ்(31). இவர் கடந்த மாதம் 12ம் தேதி இரவு 10 மணி அளவில் தனது வீட்டின் வராண்டாவில் 2 செல்போன்களை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை பார்க்கும்போது 2 செல்போன்களும் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் செல்போன்கள் கிடைக்கவில்லை. இது குறித்து முத்துராஜ் ஆத்தூர் போலீசில் கடந்த மாதம் 13ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் காணாமல் போன செல்போன் ட்ராக் மூலம் தூத்துக்குடியில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன்களை திருடியது தூத்துக்குடி போல்பேட்டை மேலூர் பகுதியைச்சேர்ந்த அலிபாபா மகன் மாவீரன்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று மாவீரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 செல்போன்களையும் மீட்டனர்.

The post ஆத்தூர் அருகே வீடு புகுந்து செல்போன்கள் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,Arumugneri ,Atur ,Muthuraj ,Mukani Roundana Pillaiyar Temple Street ,Thoothukudi District Attur ,
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்