×

கழுகுமலை அருகே கோயில் கொடை விழா: பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்

கழுகுமலை,மே20: கழுகுமலை அருகே சி.ஆர்.காலனி  முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பறவைக்காவடி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் சி.ஆர்.காலனியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பறவைக்காவடி மற்றும் 14, 12, 10 அடி வேல் அலகு குத்தி ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்து நேர்ச்சை செலுத்தினர். இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாமக்கொடை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post கழுகுமலை அருகே கோயில் கொடை விழா: பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Kalgakumalai ,CR Colony ,Muthumariamman ,Deeparathan ,Muthumariyamman ,Vinayaka ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்