×

காங்கோ அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு: 3 பேர் பரிதாப பலி

கின்ஷாசா: காங்கோ அதிபர் மாளிகை அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர். காங்கோ ஃபெடரல் பேரவை தொகுதி உறுப்பினரான விட்டல் கமர்ஹெகே தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அதிபர் மாளிகையில் வசித்து வருகிறார்.

இங்கு நேற்று அதிகாலை ராணுவ உடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர்.

The post காங்கோ அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு: 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Congolese presidential palace ,Kinshasa ,Congolese Federal Assembly Constituency ,Vital Kamerheke ,Dinakaran ,
× RELATED காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம்