×

பயிர்களின் பூஸ்டர்கள் பயன்பாடு: வேளாண் மாணவிகள் விளக்கம்

அலங்காநல்லூர், மே 19: அலங்காநல்லூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சின்ன இலந்தைக்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் வளர்ச்சிக்கான சத்துக்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, தென்னை டானிக், பயறு வொண்டர், கரும்பு பூஸ்டர், காட்டன் ப்ளஸ், நிலக்கடலை ரிச் போன்ற பயிர் வளர்ச்சிக்கான பூஸ்டர்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறித்தும், இவை தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திரவ உயிர் உரம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிகக்ப்பட்டது. இதில் விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த முகாமில் ஆர்த்திகா உள்ளிட்ட மாணவிகள் விவசாயிகளுக்கு பல்வேறு வகை விவசாய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கினர்.

The post பயிர்களின் பூஸ்டர்கள் பயன்பாடு: வேளாண் மாணவிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Alankanallur ,Madurai Agricultural College ,Alankanallur district ,Chinna Ilandikulam ,
× RELATED காளான் வளர்ப்பு குறித்து கம்பம் பகுதி விவசாயிகளுக்கு விளக்கம்