×

பெரியநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

ஊட்டி, மே 19: உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதால் தொழிற்பிரிவுகளுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் மட்டும் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இச்சேர்க்கைக்காக 07.06.2024 வரை இணையதள மூலம் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

2 ஆண்டுகள் பொருத்துநர் பயிற்சி மற்றும் கம்மியர் மோட்டார் வண்டி பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள் தொழிற் பயிற்சி, குழாய் பொருத்துபவர் பயிற்சி, பற்றவைப்பவர் பயிர்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் மெக்கானிக் எலக்டரிக் வாகனம் பயிற்சி, அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷின் டெக்னீசியன் மற்றும் இன்டஸ்டிரியல் ரோபாடிக் மற்றும் டிஜிட்டல் மேனிபேக்சரிங் டெக்ஜீசியன் ஓராண்டு பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் சேர, கம்பியாள், குழாய் பொருத்துநர், பற்றவைப்பவர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு பள்ளியில் முறையாக பயின்று பள்ளியின் தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர தொழிற்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் எண், முன்னுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவைற்றை கொண்டு பதிவேற்றம் செய்யலாம். மதிப்பெண் அடிப்படையிலும் அரசு விதிகளின்படி கலந்தாய்வு சேர்க்கையின் மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம். வயது வரம்பு அனைவருக்கும் 14 முதல் 40 வரை (மகளிருக்கு வயது வரம்பு இல்லை). மேலும், உணவுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெளிசெல்லும் மாணவர்கள் 8ம் வகுப்பு மற்றும் என்டிசி., என்ஏசி., (தமிழ் மற்றும் ஆங்கிலம்) முடித்திருந்தால் அவர்கள் 10 வகுப்புக்குச் சமமான கல்வித்தகுதியினை பெறுவர். பயிற்சியாளர்கள் 10ம் மற்றும் என்டிசி, என்ஏசி, (தமிழ் மற்றும் ஆங்கிலம்) முடித்திருந்தால் அவர்கள் 12ம் வகுப்புக்குச் சமமான கல்வித்தகுதியினை பெறுவர் என்றும் அரசாணை வெயியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், உப்பட்டி முதல்வர் மற்றும் அலுவலர்களை 04262-296149, 9499055710, 9659152211 ஆகிய எண்களில் அணுகலாம். இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.

பெ.நா.பாளையம், மே 19: பெரியநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்த முதியவரை சடலமாக மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பெரிய நாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அதிக அளவு மழை பெய்து வந்தது. இந்நிலையில் கூடலூர் கவுண்டம்பாளையம் பிராந்தி கடை செல்லும் வழியில் உள்ள குட்டையில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. இந்த குட்டை பகுதியை ஒரு சிலர் மது அருந்துவதற்க்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கோவனூர் புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் குட்டை பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி குட்டைக்குள் விழுந்து விட்டார். உள்ளே சேறும் சகதியுமாக இருந்ததால் வெளியே வர முடியாமல் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு அலுவலர் சுரேஷ்குமார் நிலை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வெற்றிவேல் சதீஷ், கண்ணன், சதீஷ்குமார், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கணேசன் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Periyanayakanpalayam ,Ooty ,Upatti ,Nilgiri ,District ,Collector ,Aruna ,Government Vocational Training Center ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...