×

பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி கோத்தகிரி அருகே குடியிருப்பு வளாகத்தில் ஒரே நேரத்தில் உலா வந்த சிறுத்தை, கருஞ்சிறுத்தை

கோத்தகிரி, மே.19: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் சர்வசாதாரணமாக உலா வருகிறது. மேலும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரது குடியிருப்பில் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.நகர் பகுதி என்பதாலும் அதிக குடியிருப்புகளை கொண்டு அதிக மக்கள் வசிக்கக்கூடிய பகுதி என்பதால் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி கோத்தகிரி அருகே குடியிருப்பு வளாகத்தில் ஒரே நேரத்தில் உலா வந்த சிறுத்தை, கருஞ்சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Kotagiri ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கோடை மழை எதிரொலி உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரிப்பு