×

கோடை மழை எதிரொலி உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

 

கோத்தகிரி,மே28: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கோடை மழை காரணமாக உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரத்தில் கோடை மழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை பெய்தது. மேலும் மசகல்,தீனட்டி, கூக்கல்தொரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் கூக்கல்தொரை அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கோடை மழை பெய்ததன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மூலமாக கூக்கல்தொரை,மசகல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாயத்திற்கு பயன்‌படுத்தக்கூடிய முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளதாலும், கோடைக்காலம் என்பதாலும் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை இன்றி பயன்படுத்தும் அளவிற்கு பருவமழை பெய்துள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோடை மழை எதிரொலி உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Uilatti Falls ,Nilgiris district ,Kothagiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு