×

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: மீண்டும் முககவசம் அணிய அறிவுரை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியும்படி சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘‘சிங்கப்பூரில் கடந்த மே 5 முதல் 11ம் தேதிக்குள் 25900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொற்று பாதிப்பால் சராசரியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 181ல் இருந்து 250ஆக உயர்ந்துள்ளது. நாம் புதிய கொரோனா அலையின் தொடக்க நிலையில் இருக்கிறோம். இது சீராக அதிகரிக்கும். அடுத்த இரண்டு முதல் 4 வாரங்களில் தொற்று அலை உச்சத்தில் இருக்கும். அதாவது ஜூன் மாத நடுவில் அல்லது இறுதியில் தொற்றுபரவல் உச்சத்தில் இருக்கும். எனவே பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடியுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: மீண்டும் முககவசம் அணிய அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister of Health ,Singapore ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி