×

வலுவான அரசு அமைந்ததால் வெடிகுண்டு வைத்திருந்த பாக்., கையில் திருவோடு தந்துள்ளோம்: பிரதமர் மோடி பிரசாரம்

அம்பாலா: அரியானா மாநிலம் அம்பாலாவில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்த போது பேசியதாவது: ஒரு நாட்டில் வலுவான அரசு இருக்கும் போது, எதிரி எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு 100 முறை யோசித்து செயல்படும். இதே பாகிஸ்தான் கையில் வெடிகுண்டை வைத்துக் கொண்டு கடந்த 70 ஆண்டாக இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அவர்களை திருவோடு ஏந்தச் செய்துள்ளோம். எப்போது வலுவான அரசு அமைகிறதோ, அப்போதுதான் எதிரியும் நடுங்குவான்.

பாஜவின் வலுவான அரசால் தான் காஷ்மீரின் நிலைமையை மாற்ற முடிந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ராணுவத்திற்கு தங்களின் மகன்களை அனுப்பிய அரியானா தாய்மார்கள், காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதலின் போதும், கல் எறிந்து தாக்கும் சம்பவங்களின் போதும் மகன்களை எண்ண கவலை கொள்வார்கள். கடந்த 10 ஆண்டில் இவையெல்லாம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கி, காஷ்மீரை வளர்ச்சியின் பாதையை நோக்கி முன்னேறச் செய்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post வலுவான அரசு அமைந்ததால் வெடிகுண்டு வைத்திருந்த பாக்., கையில் திருவோடு தந்துள்ளோம்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Modi ,Ambala ,Ambala, Aryana ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...