×

முத்துப்பேட்டை, எடையூர் பகுதிகளில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

முத்துப்பேட்டை, மே 18: முத்துப்பேட்டை வட்டாரத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் எடையூர், அடஞ்சவிளாகம், நாச்சிக்குளம் பகுதிகளில் நடந்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளின் போது டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு குறித்து உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. மேலும் தூய்மை மற்றும் சுகாதாரபணிகளும் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பணிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், செந்தில், கதிரவன், பாலசண்முகம், விக்னேஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.

The post முத்துப்பேட்டை, எடையூர் பகுதிகளில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : National ,Day ,Muthuppet, Udaiyur ,Muthuppet ,National Dengue Day ,Muthupet district ,District Medical Officer ,Dr. ,Killivalavan ,Muthupettai Government Hospital ,Udaiyur ,Atanjavilakam ,Nachikulam ,
× RELATED புதுவையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்