×

அறந்தாங்கியில் நடந்து செல்லும் பெண்களிடம் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவம்

 

அறந்தாங்கி, மே 18: அறந்தாங்கி பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அறந்தாங்கி நகர் பகுதியில் மாலை நடைபயிற்சி சென்ற பெண்னிடம் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க செயினை பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார்.

இந்நிலையில் நேற்று நாகுடி அருகே கூத்தங்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வேகமாக வந்த இரண்டு நபர்கள் அந்த பெண் கழுத்தில் அணிந்து இருந்த தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்து காயம் அடைந்த பெண் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் அறந்தாங்கி பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளதால் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கியில் நடந்து செல்லும் பெண்களிடம் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Arantangi ,Aranthangi ,Pudukottai district ,
× RELATED அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்