×

விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்

 

திருப்புத்தூர், மே 18: திருப்புத்தூர் ஒன்றியம் செவ்வூரில் உள்ள தனியார் பள்ளியில் ‘ஸ்பேஸ் எக்ஸ்போ டி-24’ என்ற விண்வெளி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இக்கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசினார். இக்கண்காட்சியில் பூமியிலிருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும் செவ்வாய் மற்றும் சந்திரனை நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கோளரங்கமும், கோள்களின் இயக்கம், தூரம், தன்மை போன்றவற்றை எளிதாக கண்டுணரும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு விதமான டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் உள்ள கோள்களை எவ்வாறு காண்பது என்ற செயல்முறை விளக்கமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

The post விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Space Expo D-24 ,Chevvur, ,Tiruputhur Union ,Minister ,Periyagaruppan ,Mars ,Earth ,Space Exhibition ,
× RELATED பட்டமளிப்பு விழா