×

அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் குடியாத்தம் தனியார் நிதிநிறுவனம்

வேலூர், மே 18: குடியாத்தம் தனியார் நிதி நிறுவனம் அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று குடியாத்தத்தைச் சேர்ந்த 11 பேர் நேற்று வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய பலர் பணத்ைத கொடுத்தனர். இதேபோல் நாங்களும் ₹5 லட்சம், ₹10 லட்சம் என பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தோம். மொத்தமாக ₹1 கோடி வரை கொடுத்துள்ளோம். அவ்வாறு பணத்தை செலுத்திய சில மாதங்களில் அவர்கள் தெரிவித்தபடி மாதந்தோறும் முறையாக வட்டி கொடுத்து வந்தனர். இதனால் மேலும் பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வட்டி தருவதை நிறுத்தி விட்டனர். இதுதொடர்பாக நாங்கள் அந்த நிறுவனத்தில் கேட்க சென்றபோது நிதி நிறுவன உரிமையாளர் இல்லை. அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. பலமுறை சென்றபோதும் உரிமையாளரை பார்க்க முடியவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் குடியாத்தம் தனியார் நிதிநிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Kudiattam Private Finance Company ,Vellore SP ,Vellore ,Kudiatham private finance company ,Kudiatham Private Financial Institution ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் ₹3 லட்சம், 3 சவரன் நகை மோசடி...