×

₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், மே 18: மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ₹2லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், மொத்தம் 50 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ₹87.40 முதல் ₹93.25 வரையிலும், 2ம் தரம் ₹74.80 முதல் ₹83.10 வரை என மொத்தம் ₹2லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 24ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Cooperative Society ,Tiruchengode Agriculture Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி