×

திரிணாமுல் தலைவர்கள் வீட்டில் ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், புர்பா மெதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள கதி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு தலைவர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையில் பாஜ தொண்டர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சிபிஐ அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேபப்ரதா பான்டா மற்றும் நந்தாதுலால் மெய்தி ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

The post திரிணாமுல் தலைவர்கள் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Kolkata ,CBI ,Trinamool Congress ,Kathi ,Purba Medinipur ,West Bengal ,2021 elections ,Dinakaran ,
× RELATED அவதூறாக அறிக்கை வெளியிடக்கூடாது...