- ரேம்
- சமாஜ்வாடி கட்சி
- அயோத்தி
- அயோத்தி ராம்
- பாஜக
- சமாஜ்வாடி
- இந்தியா
- பைசாபாத்
- மக்களவை
- உத்திரப்பிரதேசம்
- லல்லு சிங்
- தின மலர்
அயோத்தி: அயோத்தி ராமரால் பாஜவுக்கு பலனேதுமில்லை, இந்தியா கூட்டணிக்கே ராமரின் ஆதரவு உள்ளதாக சமாஜ்வாடி தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மக்களவை தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜ வேட்பாளராக தற்போதைய மக்களவை உறுப்பினர் லல்லு சிங் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் ஒன்பது முறை பேரவை உறுப்பினராக இருந்த அவதேஷ் பிரசாத் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் பைசாபாத் தொகுதியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவதேஷ் பிரசாத் அளித்த பேட்டியில், “கடந்த 10 ஆண்டுகளில் லல்லு சிங் தொகுதி மக்களை பார்க்க ஒருமுறை கூட வரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அதனால் இப்போது பாஜவுக்கு எந்த பலனும் இல்லை. நான் அயோத்தியில் பிறந்தது என் அதிர்ஷ்டம். ராமரின் கருணையை புறக்கணித்து விட முடியாது. ராமரின் ஆதரவு இந்தியா கூட்டணி வேட்பாளரான எனக்கு முழுமையாக இருக்கும். பாஜ மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. பணவீக்கம் பெருகி விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைசாபாத் வாக்காளர்கள் பாஜவை தோற்கடிக்க விரும்புகின்றனர் ” என்றார்.
The post இந்தியா கூட்டணிக்கே ராமரின் ஆதரவு: சமாஜ்வாடி கட்சி உறுதி appeared first on Dinakaran.