×

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்விற்காக ராசிபுரம் செல்லும் வழியில் பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நாள்தோறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி இன்று (17.5.24) ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ராசிபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழியில், பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் காலை சுமார் 10.15 மணியளவில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக மீட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வந்த மற்றொரு அலுவலக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

The post வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா appeared first on Dinakaran.

Tags : Namakkal District ,Collector ,Uma ,Namakkal ,Pommakuttaimedu ,Lakshmi ,hall ,Rasipuram ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு