×

தென் இந்தியாவில் உ.பி மக்களையும், மொழியையும் இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள் : பிரதமர் மோடி

லக்னோ : தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 130 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், உ.பி.யில் தென்னிந்தியர்களை விமர்சித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தென் இந்தியாவில் உ.பி மக்களையும், மொழியையும் இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் எனப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள், உ.பி.யை அவமானப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட I.N.D.I.A. கூட்டணியை நீங்கள் மன்னிப்பீர்களா?” இவ்வாறு தெரிவித்தார்.

The post தென் இந்தியாவில் உ.பி மக்களையும், மொழியையும் இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : South India ,U. B ,PM Modi ,Lucknow ,South Indian ,U. B. ,Modi ,Sanathana Dharmatha ,U. ,Dinakaran ,
× RELATED பூஜா கேத்கர் விவகாரம்; யு.பி.எஸ்.சி...