×

தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது

சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ₹55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ₹54,000க்கும், 13ம் தேதி ₹53,800க்கும், 14ம் தேதி ₹53,320க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ் ச்சி அடைய செய்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ₹35 அதிகரித்து ஒரு கிராம் ₹6,725க்கும், சவரனுக்கு ₹280ம் உயர்ந்து ஒரு சவரன் ₹53,800க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ஒரு கிராம் ₹6,795க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ஒரு சவரன் ₹54,360க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹840 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.

The post தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!