×

ஆந்திரா தேர்தல் முடிவுகளை கண்டு ஒட்டு மொத்த இந்தியாவே ஆச்சரியப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் பேச்சு

திருமலை: ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என விஜயவாடாவில் ஐபேக் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசினார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஐபேக் நிறுவனத்தினர் தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்தி வந்தனர். இந்நிலையில் மே 13ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் தனது கட்சி வெற்றிக்காக பணிபுரிந்த ஐ பேக் பிரதிநிதிகளுடன் விஜயவாடாவில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் நேற்று நேரடியாக சென்றார். அப்போது, தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்தி வந்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

பின்னர், நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது:
ஜூன் 4ம் தேதி வெளியாகும் ஆந்திர தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலில் 151 சட்டமன்றம், 22 எம்பி இடங்கள் வென்றோம். ஆனால் இந்த முறை வெற்றிப்பதிவு அளவில் இல்லை. கடந்த தேர்தலில் பெற்ற 151 சட்டப்பேரவை, 22 மக்களவை இடங்களை விட அதிகளவில் இந்தமுறை வெற்றி பெறுவோம். கடவுளின் அருளால் நான் நல்ல நிர்வாகத்தை வழங்கினேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். அதைவிட வரும் ஐந்து ஆண்டுகளில் மிகச்சிறப்பாக ஆட்சி நடதூதுவோம்’ என்றார்.

The post ஆந்திரா தேர்தல் முடிவுகளை கண்டு ஒட்டு மொத்த இந்தியாவே ஆச்சரியப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,Jagan Mohan ,Tirumala ,Andhra Pradesh ,Jaganmohan ,Vijayawada ,IPAC ,YSR Congress party ,
× RELATED ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா