×

பணி நிறைவு சான்று தர நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு

 

பல்லடம், மே 17: பல்லடம் நகராட்சி ஆணையாளர் பானுமதியை சந்தித்து புதிய வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது குறித்து வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:பல்லடம் நகரில், கடைகளுடன் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளது.மின்வாரியத்தில் கேட்ட போது, விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், நகராட்சி மூலம் கட்டிட பணி நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் பணி நிறைவு சான்று தர அரசு உத்தரவு வரவில்லை என கூறுகின்றனர். இதனால் பல லட்சங்கள் முதலீடு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் பயனில்லாமல் கிடக்கின்றன. தற்காலிக மின் இணைப்பு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது.எனவே நகராட்சி நிர்வாகத்தினர் பணி நிறைவு சான்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post பணி நிறைவு சான்று தர நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Municipal Commissioner ,Banumathi ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்