×

சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர் வழங்கிய பரிசு தொகையில் சமுதாய நலக்கூடம்

மதுராந்தகம்: சிறந்த பேரூராட்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பரிசு தொகையில் கருங்குழி பேரூராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. கருங்குழி பேரூராட்சி கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறந்த பேரூராட்சியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி அந்த பேரூராட்சியின் கட்டமைப்பு வசதிக்காக ரூ.10 லட்சம் பரிசு தொகைக்கான காசோலையை வழங்கினர். முதலமைச்சர் வழங்கிய இந்த ரூ.10 லட்சம் நிதி உதவியுடன், பேரூராட்சியின் பொது நிதி ரூ.10 லட்சம் சேர்த்து ரூ.20 லட்சம் மதிப்பில் 11வது வார்டு மலைப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மினி ஹால் (சமுதாயக்கூடம்) கட்டி கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த சமுதாய கட்டிடம் குறித்து செயல் அலுவலர் அருண்குமார் கூறுகையில்,‘மலைப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய ரூ.10 லட்சம் ஊக்கப் பரிசுடன் பேரூராட்சி பொது நிதி ரூ.10 லட்சம் சேர்த்து மினி ஹால் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தில், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள ஏதுவாக வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர் வழங்கிய பரிசு தொகையில் சமுதாய நலக்கூடம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Madhurandhakam ,Karunkuzhi Municipality ,Tamil Nadu ,M.K.Stalin ,Karunguzhi ,government of Tamil Nadu ,
× RELATED மதுராந்தகம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள்