×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், புத்திரன்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். கல்வியாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.இதில், புத்திரன்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் 10ம் பொதுத்தேர்வில், அப்பள்ளி மாணவி ரோஷினி 489 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், லோகிஷா 457 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், பவஸ்ரீ 433 மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அதன்படி, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார் மாலை அணிவித்து கை கடிகாரத்தை பரிசாக வழங்கி, ஊக்கத்தொகை வழங்கினார். மேலும், அப்பகுதி கிராம முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில், புத்திரன்கோட்டை உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார், முன்னாள் மாணவர் சங்கம் தலைவர் தீர்த்தமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Chittamur ,Union ,Putrankottai Government High School ,Panchayat Council ,Nirmal ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...