×

கெங்கையம்மன் கோயில் தீமிதி விழா

புழல்: செங்குன்றம் அடுத்த ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோயில் 3ம் ஆண்டு தீமிதி திருவிழா முன்னிட்டு கடந்த 11 நாட்களாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பன்னீர்வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 120 பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post கெங்கையம்மன் கோயில் தீமிதி விழா appeared first on Dinakaran.

Tags : Kengaiyamman Temple Dimithi Festival ,Dimithi ,Kenkai Amman ,Temple ,Panneervakkam ,Angadu ,Sengunram ,Dinakaran ,
× RELATED பூச்சாத்தனூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா