×

பாக்குமட்டை தட்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தீ ரூ.20 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் எரிந்து நாசம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட தோமூர் கிராமத்தில், கிரிவேல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(60). இவர் கணபதி என்பவருக்கு சொந்தமான குடோனில் பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையை ஓராண்டாக நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதமாக பணிக்கு ஆட்கள் வராததால், தொழிற்சாலை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு திடீரென குடோனில் தீ பிடித்தது. பாக்கு மட்டைகள் என்பதால் தீ மள மளவென்று குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்த கிராம மக்கள், உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருவள்ளூர் மற்றும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குடோனில் இருந்த பாக்கு மட்டைகள் இயந்திரம் உட்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாக்குமட்டை தட்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தீ ரூ.20 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Kothandan ,Krivel Natham village ,Thomur village ,Kanakammasatram ,Tiruvallur district ,Gudon ,Ganapathi ,Pakkumatt ,
× RELATED தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி 2 பேர் படுகாயம்