×
Saravana Stores

வித்தியாசமான வழிபாடுகள்

*அந்தியூர் – பவானி பாதையில், பருவாச்சி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பாளையம் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிரார்த்தனை மிகப் பிரபலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தைச் சுற்றி விடிய விடிய நடப்பார்கள். இதனால் பல்வேறு பிரச்னைகளும் தீர்வதாக நம்பிக்கை.

*காஞ்சிபுரம் திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆலய கர்ணகுண்டல ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதிலாக தேன்குழல் மாலை சாற்றப்படுகிறது. தேன்குழல் மாலை சாத்தி இந்த அனுமனை வணங்கினால் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

*வாஸ்து தோஷம் உள்ள வீட்டிற்குச் சொந்தக்காரர்கள் திருச்சி – கீழபபுலிவார் சாலையில் உள்ள பூலோகநாத சுவாமி கோயிலில் நடக்கும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால் அத்தோஷங்கள்
நீங்குவதாக ஐதீகம்.

*கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் ஆலயத்தில், சரியாகப் பேச்சு வராத குழந்தைகளுக்கு அர்ச்சகர் தேனைத் தொட்டு நாக்கில் குச்சியால் எழுதுகிறார். அதன்பின் குழந்தைகள் நன்றாகப் பேசுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
*தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள கண்டமங்கலம் பெருமாள் ஆலயத்தில் அருளும் அனுமனுக்கு மட்டைத் தேங்காய் கட்டி வழிபட தடைப்பட்ட திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கிறது.

*திருவாரூர் அருகேயுள்ள வீரவாடியில் உள்ள வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வமாலை சாத்தி தயிர்சாதம் படைக்க செவ்வாய் தோஷம் நீங்குகிறது.

*ஈரோடு, கோபியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மொடச்சூரில் அருளும் வேட்டைக்கார சாமிக்கு அப்பகுதி வாகன ஓட்டிகள் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டே செல்கின்றனர். விபத்துகள் ஏற்படாமல் காக்கும் சாமி இவர்.

*கிருஷ்ணகிரி – கோட்டையூரில் நூற்று ஒன்று சாமிமலையில் உள்ள குகையில், ஓரடி உயரமுள்ள கல் அகல் விளக்கில் இளநீர் விட்டு எரித்தால் அது அழகாக எரிகிறது. அதில் விளக்கேற்றுபவர்களின் துன்பங்கள் நீங்கி, மன அமைதி கிட்டுகிறது.

*திருப்போரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூர் வைத்தியலிங்கேஸ்வரர் ஆலய தையல்நாயகி அம்மனுக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் விளக்கேற்ற கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆவதாக நம்பிக்கை.

*தர்மபுரி கல்யாண காமாட்சிக்கு ஆடிப்பூரத்தன்று நடைபெறும் வளைகாப்பு வைபவத்தில் அம்மன் மடியில் முளைப்பயிறு கட்டுதல் நடக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் அந்த பிரசாதத்தை உண்டு, அந்த வரத்தைப் பெறுகின்றனர்.

*சென்னை ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலுக்கு வெளியே அருளும் சுதர்சன நரசிம்மருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கறுப்பு உளுந்தால் (தோலோடு கூடிய) வடைமாலை சாத்த அனைத்து கோரிக்கைகளும் தப்பாமல் நிறைவேறுகிறது.

*திருச்சி – உறையூரில் உள்ள வெக்காளியம்மன் சந்நதியில் வெக்காளி அம்மன் துணை என்று சீட்டில் எழுதி கட்டினால், ஞாபக சக்தியைப் பெருக்கி, தேர்வு நன்கு எழுத அம்மன் அருள்புரிகிறாள்.

*சேலம் – கோட்டை மாரியம்மன் ஆலயத்தின் கருவறை பிராகாரத்தை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை வலம் வரும் ‘அடியளந்து கொடுத்தல்’ எனும் பிரார்த்தனையை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

*காரைக்குடி – பிள்ளையார்பட்டி வழியில் உள்ள கீழக்கரையில் ஒரே இடத்தில் 108 விநாயகர்களை சங்கடஹரசதுர்த்தியன்று தரிசிக்க, எல்லாவிதமான சங்கடங்களும் தொலைகின்றன.

*மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள வடபாதி மங்கலம் சுயம்பு சுந்தரேஸ்வரருக்கு வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபட, வெளிநாட்டு வேலை வேண்டுவோர்க்கு அது கிட்டுகிறது.

*சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள காளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க, ராகு – கேது தோஷங்கள் நீங்குகின்றன.

*காஞ்சிபுரம் காந்தி ரோடு மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் 16 வாரங்கள் விளக்கேற்றி வழிபட, வழக்குகளில் வெற்றி கிட்டும்.

*திருவொற்றியூரிலிருந்து ரெட்ஹில்ஸ் செல்லும் பாதையில் உள்ள விளாங்காடு பாக்கம் இல புரீஸ்வரரை வணங்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். ராமனின் மகனான லவன், ராமர் – சீதை ஒன்று சேர்வதற்காக இந்த ஈசனை
பூஜித்தாராம்.

*கும்பகோணம் அருகிலுள்ள வன்னிகுடி முழையூரில் அருளும் அம்பிகை சௌந்தரநாயகியின் சந்நதி முன்னே அமர்ந்து சாந்தி முகூர்த்த நேரம் குறித்தால் நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

*சென்னை – முத்தியால்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரரும் மரகதாம்பிகையும் கர்ப்பப்பை கோளாறுகளை தீர்ப்பதில் நிகரற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.

The post வித்தியாசமான வழிபாடுகள் appeared first on Dinakaran.

Tags : Antiyur – Bhavani ,Baruachi ,Masi ,Palayam Mariamman temple ,
× RELATED மதுரை நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை