×

ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி : I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராகுலை பிரதமர் ஆக்க கட்சிகளிடம் கோரிக்கை வைப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். I.N.D.I.A. கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது பிரதமர் மோடிக்கே தெரியும் என்று கூறிய அவர், கூட்டணியை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி தேர்தலுக்கு பின் பாஜக பக்கம் கூட சாய்வார் என்றும் I.N.D.I.A கூட்டணி வென்றால் வெளியில் இருந்து ஆதரவு என மம்தா கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

The post ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Adhir Ranjan Chaudhary ,Delhi ,Congress ,Adhir Ranjan Chowdhury ,INDIA alliance ,Modi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...