×

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

திருப்பதி: திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலிபிரி கருடா சந்திப்பில் நடந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் அசம்பாவிதங்கள் இன்றி உயிர் தப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீப்பிடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பக்தன் சிலர் காரில் திருப்பதியில் உள்ள அலிபிரி கருடா சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த பக்தர்கள் காரில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறிய நிலையில் சிறுது நிமிடங்களிலேயே கார் முழுவதும் பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். மலை பாதையில் இறங்கும் பொழுது காரின் பிரேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ பிடித்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்ததில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

The post திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Sami ,Tirupati temple ,Tirupati ,Alibiri Garuda ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.25 கோடி காணிக்கை