×

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. புதிய உச்சத்தை தொட்ட பின்னர், தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி அட்சயதிருதியை அன்று சவரனுக்கு ரூ.1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்பனையானது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனையானது.

12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து 13ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்கப்பட்டது. 14ம் தேதியும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,320க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725க்கும், ஒரு சவரன்ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அதாவது சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் நகை வாங்குவோர் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.50 உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ ரூ.91,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

The post மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...