×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருமருகல், பரவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் அதிகாலை லேசான மழை பெய்தது. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

கும்பகோணம் நகரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம், கரிக்குளம், அம்மா சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. அனுமந்தை, கூனிமேடு, ஆலப்பாக்கம், மண்டவாய் உள்ளிட்ட இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., நாமக்கல், கொள்ளிடத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மதுரையில் 4.7 செ.மீ., பாளையங்கோட்டையில் 2.8 செ.மீ., நாகை, வால்பாறையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம்-2.8 செ.மீ., திருவாரூர்-2.4 செ.மீ., சிதம்பரம் 2.1 செ.மீ., வேதாரண்யம்-2 செ.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 3.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai M. R. C. ,Nagar ,Maylapur ,Herd ,Marina ,Patinapakkam ,Adiyaru ,
× RELATED சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து