×
Saravana Stores

ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்

கடலூர்: ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் வாங்கிய பாஜவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி ஊராட்சியில் 2023-24க்கான குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரான பி. முட்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (33) ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். இந்நிலையில் பாஜவை சேர்ந்த மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவரான சற்குருநாதன், சந்தோஷிடம் ₹30,000 லஞ்சம் கேட்டுள்ளார். அவர் உடனடியாக அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறவே, பாதி பாதியாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதுபற்றி சந்தோஷ், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின் பேரில் நேற்று சந்தோஷ், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதனிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,BJP ,Cuddalore ,panchayat council ,Manjakuzhi panchayat ,Barangippet ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED வேடந்தாங்கல் ஊராட்சியில் கலைஞர் கனவு...