×

விதை நேர்த்தி குறித்த செயல்விளக்க பயிற்சி

அயோத்தியாப்பட்டணம், மே 16: அயோத்தியாப்பட்டணம் பகுதியில், நாமக்கல்லை சேர்ந்த தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள், கிராமப்புற வேளாண் அனுபவத்திற்காக வந்துள்ளனர். நேற்று அவர்கள் விதை நேர்த்தி பற்றி செய்முறை விளக்கம் செய்து காண்பித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஊக்குவித்த விதைக்கட்டு, செடிகளின் வேர்களுக்கு உறுதி தரும். ஒருங்கிணைத்த ஊட்டச்சத்து வேளாண்மை மூலம் செடிகளுக்கு அனைத்து ஊட்டச்சத்தையும் பெற முடியும். அதேபோல், எந்த ஒரு ஊட்டச்சத்தும் வீணாகாமல் அனைத்தையும் விதை எடுத்துக் கொள்ளும் என விதை நேர்த்தி குறித்து, விவசாயிகளிடம் வேளாண் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

The post விதை நேர்த்தி குறித்த செயல்விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Namakkal ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!