×

வெப்பம் தணித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல், மே 16: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, நாமக்கல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பஅலை சற்று தணிந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெப்பம் வீசி வந்தது. இந்த நிலையில், கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால், கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில், நேற்று முன்தினம் பெய்துள்ள மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): மங்களபுரம்-17, புதுச்சத்திரம்- 24, ராசிபுரம்- 4, திருச்செங்கோடு- 32, கலெக்டர் அலுவலகம்- 4, கொல்லிமலை- 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

The post வெப்பம் தணித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 146 வழக்குகள் பதிவு