×

மேலூர் அருகே திருமறைநாதர், வேதநாயகி வீதியுலா

மேலூர், மே 16: மேலூர் அருகே திருவாதவூர் ஹரிமருத்தன பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் (திருமறைநாதர்) கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான இங்கு வைகாசி உற்சவ பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் சமேதரராக பல்வேறு வாகனங்களில் தினசரி எழுந்தருளி திருக்கோயிலை சுற்றியுள்ள நான்கு வெளி விதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தினர்.

The post மேலூர் அருகே திருமறைநாதர், வேதநாயகி வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Melur, Tirukayanathar, ,Vedanayake road ,Melur ,Shiva ,Thirupayanathar ,Pandya king ,Harimarudhana ,Thiruvadhavur ,Vaikasi Utsava Festival ,Madurai Meenakshi Amman Temple ,Thiruparanathar ,Vedanayaki Vethiula ,Mellur ,
× RELATED மதுரையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை