×

பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாகிஸ்தான் ராணுவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஃபத்தா-2 என்ற அதி நவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இது 400 கிமீ வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதி நவீன வழிசெலுத்துதல் அமைப்பு, தனித்துவமான பாதை மற்றும் பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த ஏவுகணை அதிக துல்லியமாக இலக்குகளை தாக்கி எந்த ஒரு ஏவுகணை அமைப்பையும் வீழ்த்தும் திறன் கொண்டது. கடந்த டிசம்பர் மாதம் இந்த ஏவுகணையின் முதல் சோதனை நடந்தது. 2வது முறையாக நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஏவுகணை சோதனையை ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் பார்வையிட்டனர். ஃபத்தா-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

The post பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Pakistan Army ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுக்கு பின் ஒப்புக்கொண்ட தளபதி:...