- தில்லி
- முதல்வர்
- கேஜ்ரிவால் உருகு
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- கெஜ்ரிவால்
- காங்கிரஸ்
- ஜே. பி அகர்வால்
- சாந்தினி ச k க்
புதுடெல்லி: டெல்லி சாந்தினி சவுக்கில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் சிறையில் இருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். நான் ஒரு சாதாரண நபர். நம் ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப்பில் மட்டும் ஆட்சி செய்யும் ஒரு சிறிய கட்சி. நான் என்ன தவறு செய்தேன், எதற்காக என்னை கைது செய்தார்கள் என்று யோசித்து கொண்டுள்ளேன். ஆனால் சிறையில் இருந்தபோது மக்களாகிய உங்களை பிரிந்து மிகவும் வருந்தினேன். உங்களை நான் நேசிக்கிறேன். நீங்களும் என்னை நேசிப்பது எனக்கு தெரியும்.
குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவது, அவர்களுக்காக நல்ல பள்ளிக்கூடங்களை கட்டுவது, 24 மணி நேர இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகளை திறந்தது, இலவச மருந்துகள் வழங்கியது இவைதான் நான் செய்த தவறு என பாஜ நினைக்கிறது. இப்போது பாஜ நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறது. நீங்கள் வாக்களிக்க போகும்போது நான் மீண்டும் சிறைக்கு போக வேண்டுமா? வேண்டாமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறை செல்வேன். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தால் மீண்டும் சிறைக்கு போக மாட்டேன். சிறைக்கு செல்வதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் ” என்று உருக்கமாக தெரிவித்தார்.
The post நான் சிறை சென்றாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கம் appeared first on Dinakaran.